இஸ்லாமிய மக்கள் நல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எழுச்சியுடன் கொண்டாடப்படும் – தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயபூர்வமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக முக்கியமான இந்தப் பண்டிகை தருணத்தில் – தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று, நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.