சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் சீன மொழி குறித்து எதுவும் இல்லை. ஆனால், கொரிய மொழி, போர்சுக்கீசிய மொழி, ரஷ்ய மொழி போன்றவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்கள் கற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. தேசியக் கல்விக்கொள்கை நலன்களும் ஆர்வங்களின்படி, உலக அறிவு மற்றும் கலாச்சராங்கள் பற்றி அறிய கொடுக்கப்படும் வெளிநாட்டு மொழிகளில் சீன மொழிகுறித்து எந்த தகவல்களும் இடம்பெறவில்லை. ஆனால், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கொரிய, ரஷ்ய மொழிகளை சேர்த்துள்ளார்.
மேலும், இந்தியாவில் அதிகளவில் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சீனர்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களின் மொழியை தேசியக் கல்விக்கொள்கைகளிலிருந்து விலக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடன் ராணுவ மற்றும் பொருளாதார பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் சீன மொழியை எடுத்துள்ளதாக அரசின் நடவடிக்கையை புரிந்துகொள்ள முடிகிறது.
கடந்த ஜூன் மாதத்தில்தான் சீனா நிறுவன டிக்டாக் உள்ளிட்ட 59 மொபைல் ஆப்களையும் தடை செய்தது. இந்தவாரம் மேலும், 47 சீன பயன்பாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. சீனாவுடனான எல்லை மோதலில் சீனா மீதான எதிர்ப்பு இந்தியாவில் அதிகரித்துவிட்டதால், சீன உணவகங்களைக்கூட மக்கள் புறகணிக்கத் துவங்கிவிட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM