புலிகள்தான் காடுகளின் பல்லுயிர்ச் சூழலையும், உணவுச் சங்கிலியையும் பாதுகாக்கும் வனக்காவலன். அதனால் புலிகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக 2010 ஆம் ஆண்டு முதல் ஜூலை 29 ஆம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

image

புலிகள் தினமான இன்று வனங்களின் காவலனை காப்பாற்றும் நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும் என்றும், புலிகள் வாழ்வதற்கு ஏற்ற வனச்சூழ்நிலையை அரசு உருவாக்கித்தர வேண்டும் என்றும், வனங்களை சிதைக்கும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்

உலகம் முழுவதும் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதம் புலிகள் இந்தியாவில்தான் உள்ளது. நம் நாட்டில் மொத்தமாக 50 புலிகள் சரணாலயங்கள் உள்ளது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2018 ஆம் ஆண்டு 2,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதுமலை, களக்காடு, முண்டந்துறை, ஆணைமலை, சத்தியமங்கலம் ஆகிய 5 இடங்களில் புலிகள் சரணாலயங்கள் உள்ளன.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.