இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா தன்னை ஒரு நல்ல மனிதனாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது’’விஷயங்களை வேறு கோணத்தில் பார்க்க கற்றுக் கொடுத்திருக்கிறார் என் மனைவி அனுஷ்கா. எனக்கு துணையாக அவர் இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். நிறைய விஷயங்களை பெரிய அளவில் புரிந்துகொள்ள வைத்திருக்கிறார். ஒரு விளையாட்டு வீரராக, ஒரு தனிமனிதனாக, மக்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக நான் இப்போது உருவாகியிருக்கும் இந்த நிலைக்கு காரணம் அனுஷ்காதான்.
அனுஷ்காவை மட்டும் சந்தித்திருக்கா விட்டால் நான் மாறியிருக்க மாட்டேன். நான் ஒரு கடினமான ஆளாக இருந்தேன். என்னை நல்ல விதத்தில் மாற்றியது அவர்தான்’’ என்று கூறியிருக்கிறார் விராட் கோலி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM