கர்நாடக நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎஃப். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தப் படம் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் கதாநாயகன் யாஷுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்நிலையில், இது தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இன்று சஞ்சய் தத் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டர் வெளியாகியுள்ளது. அதிரா என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வித்தியாசமான ஹேர்ஸ்டைல், முகத்திலும் தலையிலும் டாட்டூ, கையில் வாள் என அதிரா மிரட்டுகிறார். கேஜிஎஃபின் புதிய போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன்ர். படத்தின் ரிலீசுக்காக காத்திருப்பதாக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM