சசிகலா வந்தவுடன் அதிமுக அமமுக ஒன்றிணைந்து செயல்படும் என்பது தனது கருத்து என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் “கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகளிடம் அதனை தடுக்க யுக்திகள் இல்லை. உலகளாவில் மருந்து வந்தால்தான் தீர்வு ஏற்படும். ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மின்சார கட்டணத்தை பார்த்தால் ஷாக் அடிக்கிறது.
விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தொடர்ந்து தர வேண்டும். பாஜகவை தவிர மற்ற கட்சிகளை மக்கள் விரும்புகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை இல்லை. சசிகலா வந்தவுடன் அமமுக – அதிமுக ஒன்றிணைந்து செயல்படும் என்பது எனது கருத்து. இந்தியாவிற்கு புதிய கோயில்கள் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM