பாகிஸ்தானில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஈத் அல் அதா விழாவுக்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை நேர்த்திக்கடன் அளிப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக நேரடியாக சந்தைக்கு வந்து பேரம் பேசி ஆடுகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளது.
மேலும், ஆட்டுச் சந்தைகளுக்கு முகக்கவசம் அணிந்து வரலாம் என்றும் அறிவிக்கப்படுள்ளது. கொரோனா தொற்று தொடர்பாக சமூக இடைவெளி பின்பற்றப்படுவதால் ஆன்லைன் மூலம் ஆடுகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் உள்ள ஆட்டுச் சந்தைக்கு மிகக் குறைவான மக்களே ஞாயிறன்று வருகை தந்தனர். விழாவுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஆடுகளை விற்க முடிவதாகவும், வாடிக்கையாளர்கள் பாதியாக குறைந்துவிட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
எப்போதும் குழந்தைகளுடன் சந்தைக்கு வரும் மக்கள் தயக்கத்துடன் முகக்கவசம் அணிந்து தனியாக வந்தனர். “எனக்கு கொரோனாவைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதனால் யாரும் உயிரிழந்து நான் பார்க்கவில்லை. என் அருகிலேயே பாருங்கள். யாரும் முகக்கவசம் அணியவில்லை” என்று வேடிக்கையாகச் சொல்கிறார் வியாபாரி ஒருவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM