ஒருவரின் வயிற்றில் இருந்து 20செமீ நீளமுள்ள கிச்சனில் பயன்படுத்தும் கத்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ஹரியானாவில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான பல்வாலுக்கு சில நாட்களாக சாப்பிடுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எடை குறைவு, காய்ச்சல், வயிற்று வலி என பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர்.
அதைக் கண்டதும் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 20செமீ நீளமுள்ள கிச்சனில் பயன்படுத்தும் கத்தி பல்வாலின் ஈரல் அருகே சிக்கிக் கொண்டு இருந்துள்ளது. உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னதான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. பின்னர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு கத்தி அகற்றப்பட்டது. 7 நாட்கள் ஐசியூவில் இருந்த பல்வால் தற்போது உடல்நலம் தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த மருத்துவர்கள், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவர் கிச்சனில் கத்தி போன்ற எதையோ விழுங்குவதை போல உணர்ந்துள்ளார். மெல்ல முயற்சி செய்துள்ளார். முடியாமல் தண்ணீர் குடித்து விழுங்கியுள்ளார். அதியசத்தக்க வகையில் அந்த கத்தி உணவுப்பாதை, இதயம்,நுரையீரல், குடல் என எதையும் காயப்படுத்தவில்லை. அது கல்லீரல் அருகே போய்த்தங்கிவிட்டது எனத் தெரிவித்துள்ளனர்.