அமெரிக்காவில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு நிர்வாகம் எடுத்துவருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் அமேசான் அலுவலகங்கள் மற்றும் சேமிப்புக்கிடங்குகளில் போதுமான பாதுகாப்பைப் பின்பற்றவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
அமேசான் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்திய கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் சேவியர் பெஸேரா, பணிப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, சான்பிரான்சிஸ்கோ பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட அமைப்புகள் அமேசான் அலுவலகங்களில் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக தற்போது அமேசான் சேமிப்புக்கிடங்கின் எட்டாவது ஊழியர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்குச் சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சேமிப்புக்கிடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் போதிய சமூக இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தால் கொரோனா பரவியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமேசான் சரிவரப் பின்பற்றவில்லை என ஊழியர் சியோமி பிரண்ட், பணிப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையில் மார்ச் மாதம் புகார் தெரிவித்திருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM