கோவில்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பாரதிநகர் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த எலும்புகூட்டை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர் கலா, எரிந்த நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் எரிந்த நிலையில் கிடந்த எலும்புகூடு ஆண் என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் யார்? அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா. என்ற கோணத்தில் கயத்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM