அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அது பெரிய விஷயமல்ல. ஆனால் சத்தீஸ்கரில் இருந்து ஒரு இஸ்லாமியர் , 800 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து வந்துசேர்ந்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சந்த்குரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது பயாஸ்கான். ராமரின் தாயான கெளசல்யா பிறந்த கிராமமாக அது கருதப்படுகிறது. அந்த ஊரில் இருந்து 800 கிலோ மீட்டர் நடந்தே கடந்து பூமி பூஜையில் கலந்துகொள்ளும் பேரார்வத்துடன் அயோத்தியை அடைந்துள்ளார்.

image

இந்த முயற்சியை விமர்சிக்கும் மக்களைப் பற்றிப் பேசும் பயாஸ்கான், “பாகிஸ்தானில் சிலர் இந்து மற்றும் இஸ்லாமியர்  பெயர்களில் போலி அடையாள அட்டைகளை உருவாக்கியுள்ளனர். இந்தியாவில் அனைத்துச் சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் என்பதைக் காட்ட துஷ்பிரயோகம் செய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார்.  

மத்தியப்பிரதேசம் அனுப்பூரை அடைந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது “என் பெயராலும் மதத்தாலும் நான் ஒரு இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் நான் ராம பக்தன். நாம் தேடினால், என்னுடைய மூதாதையர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பார்கள். அவர்களுடைய பெயர்கள் ராம்லால் அல்லது ஸ்யாம்லாலாக இருக்கும். தேவாலயம் அல்லது மசூதிக்குச் சென்றாலும் நாம் எல்லோரும் இந்துக்கள்தான்” என்றார்.  

image

இதுவரை பல்வேறு கோயில்களுக்காக அவர், 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்றுள்ளார். “நான் கோயில்களுக்கு நடந்துவருவது இது முதல் முறையல்ல.  15 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்திருக்கிறேன். கோயில்கள் மற்றும் மடங்களில் தங்கிவிடுவேன். ஒருவரும் எனக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதில்லை. இந்தப் பயணம் வெறும் 800 கிலோ மீட்டர்தான்” என்று எதார்த்தமாகப் பேசுகிறார் முகம்மது பயாஸ்கான் என்ற ராமபக்தர்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.