கேரள மாநிலம் கோழிக்கோடு – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் ஓரமாக பைக்கை நிறுத்தி மொபைலில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு பெரும் அதிர்ச்சிகள் காத்திருந்தன.  

அதிவேகமாக வந்த ஜேசிபி இயந்திரம் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே சட்டென்று கடந்து வந்தது. பக்கவாட்டில் இருந்து இளைஞர் மீது ஜேசிபி மோதும் படியாக வந்தது. ஜேசிபி குறுக்கே பாய்ந்ததால் அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த மஹிந்திரா பொலிரோ கார் செய்வதறியாது அதுவும் பைக்கை நோக்கி பாய்ந்து வந்தது.  

இரண்டு வாகனங்களும் தன்னை நோக்கி மோத வருவதை உணர்ந்த அந்த இளைஞர், பைக்கில் இருந்து எழுந்து இரண்டு ஸ்டெப் ஓடுவதற்குள், ஜேசிபி மீது கார் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் இளைஞர் பக்கம் திரும்பி அவரை லேசாக இடித்து தள்ளியது.   

image

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல் லேசான காயத்துடன் இளைஞர் உயிர்தப்பினார். இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

இது குறித்து பதிவிட்டுள்ள மகேந்திரா நிறுவனர் ஆனந்த மகேந்திரா அவரது நிறுவன காரினை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.