துருக்கியைச் சேர்ந்த இசையமைப்பாளர் அகமது செலிக், ஒரு வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மேற்கு துருக்கியில் உள்ள டெக்கிர்டேக் மாகாணத்தில் வானத்தில் பாராகிளைடிங்கில் பறந்துகொண்டு டிரம்ஸ் வாசிக்கிறார்.

அந்த இசைக்கலைஞர் பறந்த உயரம் 2 ஆயிரம் அடி இருக்கும். இப்படி அசாத்தியமான துணிச்சலுடன் வானில் பறந்தபடி டிரம்ஸ் வாசிப்பதன் மூலம் இசைக்கலைஞர் அகமது சமூகவலைதளங்களில் பிரபலமாகிவிட்டார். அவரது வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

வானில் பறந்துக் கொண்டே இரு பெரிய டிரம்ஸ்களை வைத்துக்கொண்டு வாசிக்கும் அழகே தனிதான். உள்ளூர் ஊடகங்கள் அவருடைய இசை முயற்சியை “பீட் ஆப் ஏ டிப்ரென்ட் டிரம்” என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன.  

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.