பாடகர்கள் தங்கள் சொந்த பாடல்களை இசையமைக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தங்கள் சொந்த ஆன்மாவை அறிந்துகொள்வார்கள் என்று கூறியிருக்கிறார், இசையமைப்பாளரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷ்மியா.

image

மேலும், அவர் எனது பாடல்கள் வழக்கமான மண்டலத்தில் இருந்ததில்லை. அவை எப்போதும் வித்தியாசமானதாக இருக்கும். அதனால்தான், வேறு யாராவது நிகழ்த்துவது சாத்தியமற்றது.  பாடகர்கள் இசையமைப்பாளர்களுடன் 10  மணிநேரம் வரை ஒத்திகை பார்ப்பது வழக்கம். முன்பெல்லாம் எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்பு இசையமைப்பாளரை தொடர்புகொள்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் டியூன் அனுப்புவது வாட்ஸப்பிலேயே உள்ளது. ஒரு இசையமைப்பாளரின் நுணுக்கங்களை புரிந்துகொள்வது கடினம்” என்றும் கூறியுள்ளார். இவர், தமிழில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.