நாமக்கல் அருகே இடுகாடு பகுதியில் ஆடைகள் இன்றி, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அடுத்த பெரியமணலி ஜேடர்பாளையம் இடுகாடு பகுதியில் இன்று காலை ஆடைகள் இன்றி கை கால்கள் கட்டப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

image

இந்த விசாரணையில் பெண் சடலமானது பெரிய மணலியை அடுத்த குமரவேலிபாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ராஜேந்திரன் என்பவரது மனைவி நாகலட்சுமி (35) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு துப்பறியும் மோப்ப நாய் பவானி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.  உடல் மீட்கப்பட்ட இடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்து பெண்ணின் உடலை இழுத்து சென்று இடுகாட்டில் வீசிச் சென்றுள்ளதற்கான தடயங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.