இந்தியா முழுவதும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் எப்போது இவை திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. பல மாநிலங்களிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டில் சேர்க்கை நடைபெறும்போது மாணவர்களிடமிருந்து சேர்க்கை மற்றும் கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

கல்வி

கேப்டன் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தின் வழியாக #AskCaptain என்ற ஹேஷ்டேக்கின்கீழ் வரும் கேள்விகளுக்கு வாரம்தோறும் பதில் அளிப்பது வழக்கம். இந்த வாரம் வந்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போது இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

“அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடமிருந்து சேர்க்கை, மறு சேர்க்கை மற்றும் பிற கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடியால் பெற்றோர் பலரும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால், கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் எனப் பெற்றோரும் கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் முதல்வர் அமரீந்தர் சிங் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Also Read: கல்வி தொலைக்காட்சி: தினமும் 2.30 மணி நேரம்! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம்

பள்ளியில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் பதிவேட்டில் இருந்து தன் மகளின் பெயரை நீக்கியதாக அம்மாநிலத்தில் ஃபடேகர் சாஹிப் (Fatehgarh Sahib) பகுதியைச் சேர்ந்த மன்பிரீத் சிங் முதல்வர் அமரீந்தர் சிங்கிடம் புகார் தெரிவித்தார். இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுக்க அவர் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அம்மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாலும் பள்ளிகளில் செய்யப்பட்ட மாற்றங்களாலும் பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு வருவதோடு அதிகளவில் தேர்ச்சி பெற்று வெளியேறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட இந்த ஆண்டு சுமார் 4.5% அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அதிகளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அம்மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 94.32% ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: நீட்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு! தமிழக அமைச்சரவை ஒப்புதல் #NowAtVikatan

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.