கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலருடைய வாழ்க்கையும் விவரிக்கமுடியாத அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சினிமா உலகில் பல பிரிவுகளில் பணியாற்றும் கலைஞர்கள் வருமானமின்றி தவித்துவருகின்றனர். இந்த நிலையில், நடனக்கலைஞர்களுக்கு உதவ நினைத்த நடிகர் ஹிருதிக் ரோஷன், அவர்களுடைய வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளார்.   

image

இந்தக் கலைஞர்கள் அனைவருடனும் பல படங்களில் ஹிருதிக் ரோஷன் பணியாற்றியுள்ளார். அவர்களுடைய சிரமத்தை நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டு உதவி செய்திருக்கிறார்.

“இந்த கஷ்டமான காலத்தில் 100 நடனக் கலைஞர்களுக்கு ஹிருதிக் உதவி செய்துள்ளார். அவர்களில் பலரும் வாடகை கொடுக்க பணமின்றி சொந்த கிராமங்களுக்குச் சென்றுவிட்டார்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்லோருக்கும் ஹிருதிக் உதவியது பாராட்டுக்குரியது. பின்னணி நடனக் கலைஞர்கள் இந்த எஸ்எம்எஸ் செய்தியைப் பார்த்ததும் உற்சாகமாகிவிட்டனர். மனமார்ந்த நன்றியை ஹிருதிக் ரோஷனுக்கு அவர்கள் தெரிவித்துள்ளார்கள்” என்று நெகிழ்ந்து பேசுகிறார் நடன ஒருங்கிணைப்பாளர் ராஜ் சூரானி.

image

நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட நடனக்கலைஞர்கள், வாழ்க்கை நடத்த பணமின்றி நலிந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய ஹிருதிக் ரோஷனுக்கு சமூகவலைதளங்களில் நன்றிகளைக் குவித்துவருகிறார்கள்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.