கொரோனா பாதித்தவர்களில் 144 பேரில் 17 சதவீத நோயாளிகளுக்கு காய்ச்சல் இருந்தது. அந்தக்காய்ச்சல் இருப்பவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது என்று ஐ.சி.எம்.ஆர் ஆய்வு வெளியிட்டுள்ளது. அதனால், சாதாரணக் காய்ச்சல் என்றாலும்கூட தாமதிக்காதீர்கள் உடனே பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டைவலி, மூச்சுத்திணறல், உடல்சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தாலும் தசைவலி, சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவையும் கொரோனா அறிகுறிகளாக உள்ளன. இந்த, ஆய்வு கடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரை செய்யப்பட்டது.  

 

image

மேலும், புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தால் அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. அவர்களை, குணப்படுத்துவதும் சிரமமாக உள்ளது. உலக அளவிலான தரவுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஆண்களுக்குத்தான் அதிகமாக பரவுகிறது. இந்தியாவிலும் அதிகளவில் ஆண்களுக்குத்தான் தொற்றியுள்ளது. காய்ச்சலில் அதிகம் கவனம் செலுத்தினால் பல நோய்கள் வருவதை தவிர்க்கலாம். ஆனாலும், 44 சதவீதத்தினர் காய்ச்சல் இல்லாமலும் மேற்கண்ட அறிகுறிகள் இல்லாமலும் கொரோனா தொற்றியவர்களாக இருக்கிறார்கள். கொரோனா அறிகுறிகளில் 34.7 சதவீதம் பேருக்கு இருமல் இருப்பதாகவும்  17.4 சதவீதம் பேருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது, அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.