வீட்டிற்கு வந்த மருமகளுக்கு 101 வகையான உணவுப் பொருட்களை வழங்கி அசர வைத்த மாமியாரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

image

மதுரை மாவட்டம் முன்றுமாவடி பகுதியைச் சேர்ந்த அஹிலா – அபுல்கலாம் தம்பதியனரின் மகன் அபுல்ஹசன். இவருக்கு கடந்த ஒன்பதாம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால் பொதுமுடக்கம் காரணமாக பெரும்பாலான உறவினர்கள் திருமணத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது வீட்டிற்கு வந்த மருமகளை மட்டுமாவது செவ்வெனே கவனிக்க நினைத்த அஹிலா, ஷப்னாவுக்கு பிரியாணி, பிரைட் ரைஸ், மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, லெமன், புளியோதரை, தயிர் சாதம், ஆம்லேட், புரோட்டா, சப்பாத்தி, அப்பளம் தொடங்கி அனைத்து வகையான சூப்பு வகைகள், பழச்சாறுவகைகள் என 101 வகையான உணவுகளை தயார் செய்து நீண்ட இலையில் வழங்கினார்.

 

image

இது மட்டுமன்றி அவற்றை ஒவ்வொன்றையும் தனது கைப்படவே மருமகளுக்கு ஊட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.