ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில் காணொளி காட்சி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முடித்திருத்தும் தொழிலாளியான மோகனின் மகள் நேத்ரா உரையாற்றினார்.

மதுரையைச் சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழிலாளி தனது மகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு உதவினார். இவரது இந்தச் சேவையை பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டினார்.

image

இதனைதொடர்ந்து மோகனின் மகள் நேத்ராவை ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட யுஎன்ஏடிஏபி என்ற தன்னார்வ நிறுவனம், உலக ஏழைகளின் நல்லெண்ணத் தூதுவராக அறிவித்து சிறப்பு செய்திருந்தது. மேலும் ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக ஏழை பெண் குழந்தைகள் குறித்து நடைபெறும் மாநாடுகளில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்திருந்தது.

 

இந்நிலையில் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்தில் ‘பாலின சமத்துவத்தை உணர செய்தல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அதிகாரம் பெறுதல்’ என்ற தலைப்பில் கடந்த ஜூலை 21ம் தேதி நடைபெற்றது.அதில் மதுரையிலிருந்து காணொலி காட்சி மூலம் பேசிய மாணவி நேத்ரா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலன் சார்ந்து கொண்டுவரும் பெண் குழந்தைகள் கல்வி (Beti Bachao Beti Padhao (BBBP) )உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், தமிழக அரசின் சார்பாக பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படுவது குறித்தும் பேசினார். மேலும் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை மத்திய அரசு 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக அதிகரித்தது குறித்தும் அந்த உரையில் பகிர்ந்து கொண்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.