ஜிலி(Zili) செயலியின் வளர்ச்சி 167 சதவீதத்தைத் தொட்டுள்ளது. அதேபோல் ஸ்நாக்(Snack) வீடியோ சுமார் 10 மில்லியன் பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 29ஆம் தேதி, இந்திய அரசாங்கம் சீனாவின் 59 செயலிகளை தடைசெய்தது. அதனால் டிக்டாக் செயலிக்கு மாற்றாக சீன டெவலப்பர்களால் உருவாக்கப்பட்ட செயலிகளான ஜிலி மற்றும் ஸ்நாக் வீடியோ இந்தியாவில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளாக இடம்பெற்றுள்ளன.

சீனாவைச் சேர்ந்த சியோமி என்பவர் ஜிலி செயலியை உருவாக்கியுள்ளார். குயிஷோ என்பவர் ஸ்நாக் வீடியோ செயலியை உருவாக்கியுள்ளார். சுமார் 8 மில்லியன் பேர் ஜிலியை தரவிறக்கம செய்ததிலிருந்து கடந்த மூன்றே வாரங்களில் மடமடவென உயரத்திற்கு சென்றுவிட்டது.

image

ப்ளேஸ்டோரில் ஒருநாளில் குறைந்தது 50 மில்லியன் பேர் இந்த இரண்டு செயலிகளையும் தரவிறக்கம் செய்துவருகின்றனர். இதில் பல இலவச பயன்பாடுகளும் தரப்பட்டுள்ளன. ஜூலை மாதத் தொடக்கத்தில் ஜிலி பொழுதுபோக்கு பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த சில வாரங்களில் இருந்து வீடியோ ப்ளேயர்கள் மற்றும் எடிட்டர்களால் ஸ்நாக் வீடியோ முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஸ்நாக் வீடியோவின் தனியுரிமைக் கொள்கைகள் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜோயோ ப்ரைவேட் லிமிடேடில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த கொள்கையின் மூன்றாவது பிரிவில் தகவல் சேமிப்பு சீனாவின் எல்லைக்குள் சேமிக்கப்படுவதாக அதில் கூறியிருக்கிறது.

 image

மேலும், உங்களுடைய தகவல்களை சீனாவின் பிற நிறுவனங்களுடனோ அல்லது உலகளவில், வணிக காரணங்கள் மற்றும் செயல்பாட்டு நோக்கங்களுக்காகவோ பகிர்ந்து கொள்ளலாம் என அதில் கூறியிருக்கிறது.

ஜிலியைப் பொருத்தவரை தகவல் சேமிப்பு இடத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் இல்லாமல் பினெகோன் இண்டர்நேஷனல் லிமிடேட் கீழ் கையாளப்படும் என்று கூறியிருக்கிறது.

image

இந்தியாவில் 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் டிக்டாக் பதிவிறக்கம் சுமார் 164 மில்லியனாக இருந்தது. இது உலகளவில் கால் பங்கிற்கும் மேலாக தரவிறக்கம் செய்யப்பட்ட ஒரு செயலி என அறிக்கை கூறுகிறது.

டிக்டாக் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாற்று வீடியோ பகிர்வுகளான ரோபோசோ, ட்ரெல் மற்றும் சிங்காரி போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. கூடுதலாக இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் மற்றும் யுடியூபின் ஷார்ட்ஸ் போன்ற புதிய தயாரிப்புகளின் புதிய அம்சங்களும் சோதிக்கப்பட்டு வருகின்றன.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.