“கடந்த இதழில், `அ.தி.மு.க-வில் சுனிலின் கரம் ஓங்குகிறது’ என்று சொல்லியிருந்தீர்களே… சுனில் தொடர்பாக இன்னொரு விவகாரமும் ஓடுகிறதே!” என்று கழுகாரிடம் கண்களைச் சிமிட்டினோம்.
“அந்த விவகாரம் அப்போதே என் காதுக்கும் வந்ததுதான். இன்னொரு முறை செக் செய்துவிட்டுச் சொல்லலாம் என்றிருந்தேன். `சுனிலை அ.தி.மு.க கோட்டைக்குள் அனுப்பியதும் தி.மு.க-வின் வியூகங்களில் ஒன்று’ என்றொரு பேச்சு இன்னொரு பக்கம் உலா வருகிறது… அதைத்தான் நீரும் சொல்கிறீர் என்று புரிகிறது. அப்படி ஒரு பேச்சு ஓடுவது உண்மைதான்.
அன்பில் மகேஷை, சுனில் சந்தித்துப் பேசியதாகக்கூட செய்திகள் கசிகின்றன. தவிர, எடப்பாடியின் சில அறிக்கைகள் சொதப்புவதற்குப் பின்னாலும் சுனில் இருக்கலாம் என்று எடப்பாடி தரப்பில் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்மீது ஒரு கண் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சரியா?”
”சரிதான்… தி.மு.க-வில் ஐபேக் – ஐ.டி விங் இடையே மோதல் உச்சத்தில் செல்கிறதாமே?”

”இருவருக்கும் என்றைக்கு ஒத்துப்போயிருக்கிறது… ‘குடிகெடுக்கும் அ.தி.மு.க’ என ஐபேக் டிரெண்ட் செய்தால், பதிலுக்கு ‘குடிகெடுக்கும் எடப்பாடி’ என ஐ.டி விங் டிரெண்ட் செய்கிறது. `கறுப்பர் கூட்டம்’ விவகாரம் பெரிதான பிறகு, `தி.மு.க-தான் அந்த இயக்கத்தை இயக்குகிறது’ என்கிற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பெரிதாக வைக்கப்பட்டது.
அதற்கு ஏற்றாற்போல, கறுப்பர் கூட்டத்தின் சேனல் நிர்வாகியான செந்தில்வாசனோடு தி.மு.க-வின் ஐ.டி விங் செயலாளர் பழனிவேல் தியாகராஜன் இருப்பது போன்ற புகைப்படங்களைக் கைப்பற்றிய காவல்துறை, அதைச் சத்தமில்லாமல் லீக் செய்துள்ளது. இந்த விவகாரத்தை ஸ்டாலினிடம் ஐபேக் போட்டுக் கொடுத்துவிட்டதாம்.”
”ஓஹோ!”
”இது குறித்து தியாகராஜனிடம் ஸ்டாலின் விசாரித்திருக்கிறார். அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்காததால், ஸ்டாலின் அப்செட் என்கிறார்கள். ஏற்கெனவே ஐ.டி விங் நிர்வாகிகள் கூட்டத்தில், ‘ஐபேக் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போயிடும். நமக்குக் கட்சிதான் முக்கியம். உங்களுக்கு டார்கெட் கொடுத்திருக்கேன். அதை முதல்ல முடிங்க. பிறகு ஐபேக்குக்கு வேலை பார்க்கலாம்’ என்று தியாகராஜன் கூறியிருந்ததை கெளரவப் பிரச்னையாக ஐபேக் எடுத்துக் கொண்டது. இருதரப்பும் ஆளுக்கொரு பாதையில் பயணிக்கிறார்கள். சமாளிக்க முடியாமல் ஸ்டாலின் திணறுகிறார்.”
> தமிழக அரசின் செயல்பாடுகள் மீதான மத்திய அரசின் அதிருப்தி > தி.மு.க-வில் வேட்பாளர் தேர்வு வேலை தொடக்கம் > அ.தி.மு.க-விலும் சத்தமில்லாமல் எழுந்துள்ள புகைச்சல் > குணச்சித்திர நடிகருக்கும் அரசியல் நடிகருக்கும் இடையே நடந்த ‘வசை சம்பவம்’ > பரபரப்பான ரியல் எஸ்டேட் விவகாரம்…
– இவற்றுடன் உள்ளடக்கிய கழுகார் பகிர்ந்த தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க… https://bit.ly/2OWOkOk > மிஸ்டர் கழுகு: ஈ.சி.ஆரில் 63 ஏக்கர் நிலம்… ரகசிய விசாரணையில் ஐ.டி! https://bit.ly/3jDdiAC
சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV