விளம்பரப் படங்களின் மூலம் மக்களிடம் பிரபலமான அருள் அண்ணாச்சி, மீம்ஸ்களின் ஹீரோவாக மாறி கலக்கி வருகிறார். அவரை விளம்பரத்தில் ஜொலிக்க வைத்த இயக்குநர்கள் ஜேடி–ஜெர்ரி சினிமாவிலும் ஹீரோவாக்கி புதிய படத்தை இயக்கி வருகிறார்கள். ஊரடங்கு முடிந்ததும் படப்படிப்புப் பணிகள் பரபரப்பாகத் தொடங்கிவிடும் எனக் கூறப்படுகிறது.

விளம்பரங்களில் நடித்து எத்தனையோ விமர்சனங்களுக்கு ஆளானாலும் மாடலாக நடிப்பதை நிறுத்தாத அவருக்கு  இன்று தமிழக முழுவதும் ரசிகர்கள். பல ஹீரோயின்கள் நடிக்க மறுத்தாலும் அசராத அவருக்கு ஜோடியாக பிரபல மாடல் கீத்திகா திவாரி நடிக்கிறார்.

image

ஊரடங்கு நேரத்தில் இயக்குநர்கள் ஜேடி–ஜெர்ரியிடம் படத்தைப் பற்றிப் பேசினோம்.  “மக்களிடம் அண்ணாச்சி நடித்த விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஷோரூம் விளம்பரங்களுக்கு ஒரு முகத்தைத் தேடியபோது நானே முயற்சி செய்கிறேன் என்றார். இன்று படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இதுவொரு மாஸ் கிராண்ட் பிலிமாக உருவாகிறது. எந்த பெரிய ஹீரோக்களின் படங்களுக்கும் இணையாக, நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும். மீம்ஸ் கிரியேட்டர்கள்தான் படத்தைப் பிரபலப்படுத்தினார்கள். அதன் வெற்றிக்கும் அவர்களே  காரணமாக இருக்கப் போகிறார்கள். நிச்சயம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதில் கொடுக்கப்போகிற படமாக இருக்கும். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆண்டின் சிறந்த பாடல்களைக் கேட்கத் தயாராக இருங்கள். படத்தின் டைட்டிலைக்கூட தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். விரைவில் வெளியிடுவோம். ”  என்கிறார்கள் உற்சாகமாக இருவரும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.