கொரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், OTT, OFT முறையில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் திரையரங்குபோல் டிக்கெட் எடுத்துவிட்டு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் தியேட்டரில் படம் பார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

image
சினிமா தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்கும் சுகமே தனிதான். கொரோனா நோய் தொற்றினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், விஜய் நடித்த மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் Over The Top telecast எனப்படும் OTT முறையில் இணையத்தில் சில படங்கள் வெளியாகின. ஆன்லைனில் படம் பார்ப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாதந்தோறும் சந்தா கட்ட வேண்டும். தற்போது அதற்கும் மாற்றாக வந்திருப்பதுதான் Pay Per View எனப்படும் PPV.

இதன்மூலம் உங்களுக்கு பிடித்த படத்திற்கான டிக்கெட் கட்டணத்தை மட்டும் செலுத்தி, அதை ஆன்லைனில் பார்க்கலாம். பிரபல சினிமா தயாரிப்பாளர் சி.வி.குமார் முயற்சியால் “”ரீகல் டாக்கீஸ்”” என்ற ஆப் மூலம் ஆன்லைன் தியேட்டர் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த முறையில் “”ஒன்பது குழி சம்பத்”” என்ற திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

image

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்று ஆன்லைன் தியேட்டரில் மதுபானக்கடை என்ற திரைப்படம் வெளியானபோது, ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. அந்த குறைகள் எல்லாம் தற்போது களையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் திரைத்துறை பல்வேறு பரிணாமங்களில் மாற்றமடைந்துள்ளது. இது எந்தளவிற்கு வெற்றியளிக்கும் என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டுமென திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்

பப்ஜி விளையாட ரீசார்ஜ்க்கு பணம் தரவில்லை : கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.