இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை – சிறப்பம்சங்கள் என்னென்ன?

அஸ்திரா ஏவுகணையை இந்திய கப்பற்படை மற்றும் விமானப்படை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அஸ்திரா ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்.

பாதுகாப்பு படைக்கு தேவையான ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரித்து கொடுக்கும் அமைப்புதான் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம். இதில் தயாரிக்கப்படும் புதிய ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் விற்கப்படுகின்றன. தற்போது இந்த அமைப்பின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ள அஸ்திரா ஏவுகணையை இந்திய விமானப்படை மற்றும் கப்பல் படை கொள்முதல் செய்து கொள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் குழு அனுமதி வழங்கியுள்ளது.

India's Air Force Test Fires Astra Beyond Visual Range Air-to-Air Missile –  The Diplomat

பொதுவாக இந்தியாவிற்கு தேவையான ஹெலிகாப்டர், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவை ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படும். இந்நிலையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 250 அஸ்திரா ஏவுகணைகளை வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது, விமானப்படை, கப்பல்படை ஆகிய இரண்டுக்குமே கூடுதல் பலமாகும்.

மற்ற ஏவுகணைகள் போல் அல்லாமல் அஸ்திரா ஏவுகணை குறைந்த மற்றும் தொலை தூர இலக்கு ஆகிய இரண்டையும் குறி வைத்துத் தாக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சம் 10 கிலோ மீட்டரில் இருந்து அதிகபட்சம் 160 கிலோ மீட்டர் வரை பாய்ந்து இலக்கை தாக்கக்கூடியது. 80 கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு இலக்கை குறி வைத்து விட்டால் புயல், இடி, மழை என எந்த கால மாற்றம் ஏற்பட்டாலும் இந்த ஏவுகணையை தடுக்க இயலாது.

IAF To Get Indigenous Astra BVRAAM Missiles For Its Fighter Jets. Here Are  Five Things You

அஸ்திரா ஏவுகணை 154 கிலோ எடையும் 3.8 மீட்டர் நீளமும் கொண்டது. சுகோய் 30, மிராஜ் 2000, மிக் 29& மிக் 21 ஆகிய போர் விமானங்களிலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹேரியர் ஜெட் விமானங்களிலும் அஸ்திரா ஏவுகணையை பொருத்தி பயன்படுத்த முடியும். 15 கிலோ வெடி பொருளை எடுத்துச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை கடல் மட்டத்திலிருந்து 66 ஆயிரம் கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் சக்தி கொண்டது. புகை இல்லாமல் இளம் நீல வண்ணத்தில் நெருப்பைக் கக்கிக் கொண்டு சீறி பாயும் இந்த அஸ்திரா ஏவுகணை எதிரிகளை நடுங்க வைக்கும் திறன் கொண்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM