”எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்” – உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்!!

தன் மகனை போலீசார் சுட்டுக்கொல்ல வேண்டுமென விகாஷ் துபேவின் தாயார் தெரிவித்துள்ளார்.

கான்பூரில் ரவுடி கும்பல் ஒன்றைச் சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவைவே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான விகாஷ் துபேவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

image

2001ம் ஆண்டு காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே பாஜகவின் முக்கிய பிரமுகரான அப்போதைய அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை சுட்டுக் கொன்றது ஒரு கும்பல். அந்தக் கொலையின் முக்கிய குற்றவாளி விகாஷ் துபே. 1993ம் ஆண்டு வழிப்பறி செய்து தன்னுடைய குற்றக்கணக்கை தொடங்கியுள்ளார் ரவுடி விகாஷ் துபே. அடுத்தடுத்து கொலைகள், கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, கடத்தல் என விகாஷ் துபே மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் 6 கொலை வழக்குகளில் விகாஷ் துபே முக்கிய குற்றவாளி. உத்தரப்பிரதேசத்தின் முக்கிய தேடப்படும் குற்றவாளியான விகாஷ் துபேவை கைது செய்தே ஆக வேண்டுமென அம்மாநில போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

image

இந்நிலையில் தன் மகனை போலீசார் சுட்டுக்கொல்ல வேண்டுமென விகாஷ் துபேவின் தாயார் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள விகாஷ் துபேவின் தாயார் சர்லா தேவி, அப்பாவி போலீசாரைக் கொன்று எனது மகன் கொடூர செயலை செய்திருக்கிறான். நான் அந்த சம்பவம் தொடர்பாக டிவியில் செய்தி பார்த்தேன். போலீசார் எனது மகனை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல வேண்டும். அவனுக்கு கண்டிப்பாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும். நான் எனது இரண்டாவது மகன் வீட்டில் வசித்து வருகிறேன். விகாஷ் துபேவால் நாங்கள் இன்னமும் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். அவனுக்கு அரசியல்வாதிகளின் தொடர்பு வந்த பிறகே குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கினான் எனத் தெரிவித்துள்ளார்

தங்கையின் இறப்பில் மர்மம்: சுடுகாட்டில் காத்திருக்கும் அண்ணன் : இருவர் மீது வழக்குப்பதிவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM