திருப்பூர்: கைக்குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

திருப்பூரில், ஒரு வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காங்கேயம் ரோடு ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி நித்யா. இந்த தம்பதியருக்கு தர்ஷன் என்ற ஒரு வயது ஆண்குழந்தை இருந்தது.

இந்நிலையில், வழக்கம்போல் மகுடேஸ்வரன் வேலைக்கு சென்றுவிட்டார். மேல் வீட்டில் குடியிருந்த நித்யா நீண்ட நேரமாகியும் கீழே வராததால், அக்கம்பக்கத்தினர் மேலே சென்று பார்த்தனர். அப்போது, நித்யா தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

image

இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கியபடி இருந்த நித்யாவின் உடலையும் கட்டிலில் இறந்து கிடந்த குழந்தை தர்ஷன் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM