14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்கள், கோவை, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை || Rain in chennai

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மகாபலிபுரத்தில் 7 செமீ மழையும், திருக்கழுக்குன்றத்தில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். அடுத்த இரு நாட்களுக்கு மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் கேரள கர்நாடக கடற்கரைப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM