மதுரை மாவட்டம் கீழடியை சுற்றி உள்ள அகரம் அகழாய்வு நடைபெறும் இடத்தில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுப் பணி கீழடி, மற்றும் அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அவற்றில் செங்கல் கட்டுமானம், இரட்டைச் சுவர், விலங்குகளின் எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.

image

இதுவரை கீழடி பகுதியில் நடந்த அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதன்முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த நீளவடிவ பாசிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வகை பாசிகளை வியாபாரிகள், செல்வந்தர்கள் கழுத்தில் அணிந்துள்ளனர் என, தொல்லியல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து கீழடி மற்றும் அதனச்சுற்றி நடைபெறும் அகழாய்வு இடங்களில் பல்வேறு பழமையான பொருட்கள் தமிழரின் பழமையை, பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் கிடைத்து வருவது ஆரய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.