(கோப்பு புகைப்படம்)

புதுச்சேரியில் ஒரே நாளில் அதிகளவாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,48,315 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,655ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,94,227 ஆக உள்ளது.

Coronavirus Latest Updates in India State Wise | Coronavirus LIVE Updates |  Latest Coronavirus News in India State Wise | Covid 19 India Tracker |  Total Covid 19 Cases in India | The Financial Express

தமிழகத்தில் கொரோனா பரவலின் ஹாட் ஸ்பாட்டாக சென்னை விளங்குகிறது. குறைந்த பரப்பளவில் அதிக மக்கள் வாழ்ந்து வருவதால் சென்னையில், மற்ற மாவட்டங்களை விட கொரோனா பாதிப்பு அதிக வேகமாக பரவி வருகிறது. அங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1 லட்சத்தை தாண்டியுள்ளது . சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1022 ஆக அதிகரித்துள்ளது.

Corona cases statewise list India active cases recovered cases deaths |  India News – India TV

இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனாவால் ஒரே நாளில் 80 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்தம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 904 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் 485 பேரும், 405 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.