மதுரை: இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்: 6 பேருக்கு கத்திக்குத்து

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் நிலவியது. இதில் 6 பேருக்கு கத்திக்கத்து ஏற்பட்டு காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பூதகுடி கிராமத்தில் குடிபோதையில் ரஞ்சித்குமார், ராஜசேகரன் ஆகிய இரு இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறு முற்றி, கிராமத்தில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதலாக மாறியது. கிராம மக்கள் ஒருவரையொருவர் கத்தி, கட்டையால் தாக்கி கொண்டதில் 8 பேர் படுகாயமடைந்தனர். இதில் 6 பேருக்கு கத்திக்குத்தும் விழுந்தது.

image

படுகாயமடைந்த நபர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 20 பேர் மீது மதுரை அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

image

இரு தரப்பினர் மோதலால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். குடிபோதையில் இரு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி கிராம மக்கள் மோதி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் குறித்து அலங்காநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM