ஜகமே தந்திரம் திரைப்படத்தின் புதிய அப்டேட்!!

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக இயக்கிய திரைப்படம் பேட்ட. அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாகவும் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

image

படத்தின் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கொரோனா காரணமாக படம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகமல் இருந்தன.

இந்நிலையில் தற்போது ஜகமே தந்திரம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட என்ற பாடல் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது. இன்று காலை புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள படக்குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM