நெல்லை இருட்டு கடை அல்வா கடை உரிமையாளர் தற்கொலை

புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருநெல்வேலி என்று சொன்னாலே இருட்டுக்கடை அல்வா பலருக்கும் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு புகழ் பெற்றது. அந்த இருட்டுக் கடையின் உரிமையாளர் ஹரி சிங்கிற்கு சில நாட்களாக உடல் தொந்தரவு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

image

இதையடுத்து பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹரி சிங் சிகிச்சை பெற்று வந்தார்.

image

கொரோனா பாதிப்பால் திணறும் தலைநகர் டெல்லி !

இந்நிலையில் ஹரி சிங் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM