கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மன உறுதியுடன் தேர்வெழுதிய இரண்டு செவிலியர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

பஞ்சாப் மாநிலம் பட்டியலாவில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களை பணியமர்த்துவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பட்டியலாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள 411 இடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்விற்கு 8,547 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் கொரோனாத் தொற்றுப் பரவலால் 7,381 நபர்கள் மட்டுமே தேர்விற்கு வந்திருந்தனர்.

இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு செவிலியர்களும் தேர்வு எழுதினர். அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் ராஜிந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இரு செவிலியர்களும் இந்தத் தேர்வில் கலந்து கொண்டனர். இந்நிலையில் அவர்கள் தேர்வு எழுதிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பஞ்சாப் மாநில முதல் அமரேந்தர் சிங் “ எப்படி இருந்தாலும் கொரோனா அவர்களுக்கு மனச்சோர்வை அளிக்க வில்லை. அவர்களும் தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கொரோனா தொற்றுக்காக ஒதுக்கப்பட்ட மையங்களிலேயே அவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. அவர்களுக்கு எனது வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.