மலையாளத்தில் ‘அய்யப்பனும் கோசியும் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தன் காலமானார்.

அய்யப்பனும் கோசியும் என்ற மலையாள திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தன் என்ற சாச்சி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 48. நடிகர் பிருத்விராஜ் நடிப்பில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான அய்யப்பனும் கோசியும் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை இயக்கிய சாச்சிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. 

image

முதலாவது அறுவை சிகிச்சை முறையாக நடந்துள்ளது. இரண்டாவது அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்கப்பட்டதில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சாச்சியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. சாச்சியின் மூளை செயலிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மருத்துவமனையில் காலமானார். அவரது இழப்பால் மலையாள திரையுலகம் கவலையில் மூழ்கியுள்ளது.

image

செல்லமாக சாச்சி என்றழைக்கப்படும் சச்சிதானந்தன் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்விராஜ்ஜின் “சாக்லேட்” உட்பட 5 படங்களுக்கு துணை கதாசிரியராக பணியாற்றியவர். கடந்த 2012 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளிவந்த Run Baby Run படத்தின் கதாசிரியரும் இவரே. பிரித்விராஜின் ‘அய்யப்பனும் கோசியும் படத்தை இயக்கிய பிறகு காலில் ஏற்பட்ட பிரச்னையால் அவரை மருத்துவர்கள் சிகிச்சைபெறவும் ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நாற்கலி படத்தை இயக்கிய இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ராமலீலா, 2020 ஆம் ஆண்டு வெளிவந்த டிரைவிங் லைசன்ஸ் ஆகிய படங்களின் கதாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.