பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Shocked to hear about Sushant Singh Rajput. This is so difficult to process. May his soul RIP and may god give all the strength to his family and friends ?
— Virat Kohli (@imVkohli) June 14, 2020
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதனைக் கடப்பது மிகவும் சிரமம். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் கடவுள் சக்தியைக் கொடுக்கட்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
This is distressing, can’t come to terms that this has happened. Really disturbing. Brilliant actor RIP brother. pic.twitter.com/eGImqT7SNN
— Rohit Sharma (@ImRo45) June 14, 2020
துணைக் கேப்டன் ரோகித் சர்மா தனது இரங்கலில் ” இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது நடந்ததா என நம்ப மறுக்கிறேன். இது என்னை மிகவும் பாதித்திருக்கிறது. திறமையான நடிகர் ஆன்மா சாந்தியடையட்டும் சகோதரா” என உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Shocked and sad to hear about the loss of Sushant Singh Rajput.
Such a young and talented actor. My condolences to his family and friends. May his soul RIP. ? pic.twitter.com/B5zzfE71u9— Sachin Tendulkar (@sachin_rt) June 14, 2020
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் “சுஷாந்தின் மறைவு அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்திருக்கிறது. அவர் ஒரு அற்புதமான இளம் நடிகர். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
Life is fragile and we don’t know what one is going through. Be kind. #SushantSinghRajput Om Shanti pic.twitter.com/zJZGV96mmb
— Virender Sehwag (@virendersehwag) June 14, 2020
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரோந்திர சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “வாழ்க்கை ஒரு நிலையற்றது. நாம் எதை நோக்கிப் போகிறோமா எனத் தெரியவில்லை. அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்” என சுஷாந்த் மறைவு குறித்துப் பதிவிட்டுள்ளார். இவர்களை தவிர யுவராஜ் சிங், குருணால் பாண்ட்யா, டேவிட் வார்னர் ஆகியோரும் சுஷாந்தின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM