தெலங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கொரோனா அச்சம் காரணமாக நடத்தப்படாமல் இருக்கிறது. தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம் இருப்பதால் இப்போதைக்கு தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் தெலங்கானா அரசு 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியின்றி தேர்வு செய்ய அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM