மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு, பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய துறைகளை தவிர மற்ற அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதன்படி பத்திரப்பதிவு துறை அலுவலகங்களும் மூடப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலகம் திறக்கப்பட்டது. இதனிடையே மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இபாஸ் அவசியம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு, பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM