கடந்த 7.6.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘கொரோனாவில் இப்படியும் ஒரு கொடுமை! தனியார் மருத்துவமனையல் இருந்து கதறல் குரல்… ஆக்ஷன் எடுத்த ஜூ.வி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். | விரிவாக வாசிக்க > தனியார் மருத்துவமனையிலிருந்து கதறல் குரல்… ஆக்ஷன் எடுத்த ஜூ.வி https://bit.ly/3eI31Qg |
கட்டுரையில் சம்பந்தப்பட்ட மியாட் மருத்துவமனை நிர்வாகத்தின் கருத்தை அறிய முயன்று பேசினோம். மின்னஞ்சலும் அனுப்பியிருந்தோம். இதழ் அச்சுக்குச் செல்லும்வரை பதில் வரவில்லை. மறுநாள் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்.
“எங்கள் மருத்துவமனைக்கும் நெய்வேலி என்.எல்.சி-க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. விபத்தில் அடிபடுபவர்களை இங்கு அனுப்புவார்கள். அவர்களின் சிகிச்சைக்கான பணத்தை என்.எல்.சி நிர்வாகமே கட்டிவிடும். அப்படித்தான் எலும்பு முறிந்த நிலையில் கோவிந்தராஜ் வந்தார். அவரைச் சோதித்தபோது, அவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் இருந்தது.
இதை என்.எல்.சி-க்குத் தெரிவித்து, ‘முதலில் அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும். 14 நாள்கள் கழித்தே எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளிக்க முடியும்’ என்றோம். அதற்கு என்.எல்.சி தரப்பில், ‘கொரோனா சிகிச்சையை அரசு மருத்துவமனையில்தான் செய்துகொள்ள வேண்டும். எலும்பு முறிவுக்கான சிகிச்சையை மட்டும் நீங்கள் செய்யுங்கள்’ என்றார்கள்.

இதை கோவிந்தராஜிடம் தெரிவித்தோம். அவர் கொரோனாவுக்கும் எங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற விரும்புவதாகச் சொன்னார். ‘அதற்குத் தனியாக நீங்கள் பணம் கட்ட வேண்டியிருக்கும்’ என்று தெரிவித்தோம். பிறகு அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டார். நாங்கள் அதிக தொகை கேட்டதாக உங்களிடம் சொல்லியிருக்கிறார்; அதை நாங்கள் மறுக்கிறோம்.
எங்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவர், செவிலியர் சேவை, உபகரணங்கள், உணவு, தங்குமிடம் செலவுகள் உட்பட ஒரு நாளைக்கு 14 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். இதையே 14 நாள்களுக்குக் கணக்குப்போட்டு எங்கள் தரப்பில் கோவிந்தராஜிடம் சொல்லப் பட்டிருக்கலாம். இதுதான் நடந்தது” என்றார்.
பிரித்வி மோகன்தாஸ் சொன்னதற்கான விளக்கத்தை கோவிந்தராஜிடம் கேட்டோம். “என்னிடம் அவர்கள் இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் கேட்டது உண்மை. என்னுடன் வந்த மனைவிக்கும் கொரோனா இருந்ததால் என்ன செய்வது என்று கேட்டபோது, அதே அளவுக்குப் பணம் கட்ட வேண்டும் என்றார்கள்” என்றார்.
தனியார் மருத்துவமனைகள் செய்வது நியாயமா?
சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் மனதை நொறுக்குகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிறைமாத கர்ப்பிணியை சென்னைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் வாசலிலேயே இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறது அந்தத் தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஊழியர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.
– கொரோனா சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளை உயிருக்கு ஆபத்தான காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் கைவிட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘இப்படித் தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்படும் நோயாளிகள் பலரையும் எங்களாலும் காப்பாற்ற முடிவதில்லை’ என்று வேதனை பொங்கச் சொல்கின்றனர் அரசு மருத்துவர்கள்.
– இதுகுறித்த விரிவான ஜூ.வி ரிப்போர்ட்… க்ளிக் செய்க > கைவிடப்படும் நோயாளிகள்… எகிறும் கொரோனா பலி! – தனியார் மருத்துவமனைகள் செய்வது நியாயமா? https://bit.ly/3f259Cu
சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV