கொரோனா நோய் தொற்றை குணப்படுத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் புதிதாக பிசிஜி என்ற தடுப்பூசி வகையான மருந்து வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது பிசிஜி(Bacillus Calmette–Guérin) என்ற தடுப்பூசி வகையான மருந்தினை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி நாடுகளில் இந்த சிகிச்சையானது நல்ல பலனை வழங்கி வருவதால் தமிழகத்திலும் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஐசிஎம்ஆர்-யிடம் ஒப்புதல் பெற உள்ளனர். ஐசிஎம்ஆர் ஒப்புதல் பெற்றவுடன் கொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி வகை மருந்து வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

image

இந்த மருந்து, பிறந்து ஒரு வாரமான குழந்தைகளுக்கு கையில் போடப்படும் ஆன்டிபாடி தடுப்பூசி. இந்த மருந்து டிபி உள்ள நோயாளிகளுக்கும் செலுத்தப்படுகிறது. இதனை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஆன்டிபாடி என்று சொல்லக்கூடிய வைரஸ் அதிகரிக்கும். இதன் மூலம் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் எஎன மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ள மருந்துகள் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் LAMPH என்ற முறையில் 5 வகையான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. L – low Molecular weight heprin என்ற மருந்து உடல் தகுதிக்கேற்க 40 மில்லி கிராம் முதல் 60 மில்லி கிராம் வரை வழங்கப்படுகிறது. மேலும், A – Azithromycin என்ற மருந்து 500 மில்லி கிராம் வழங்கப்படுகிறது. M – Methyl predinisolone 1கிலோ எடைக்கு 2 மில்லி கிராம் என்ற வீதம் ஒவ்வொருவரின்  எடைக்கு ஏற்ப 150 மில்லி கிராம் வரை மருந்துகள் வழங்கப்படுகிறது. P – Prone ventilation அதாவது கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் போது வென்டிலேட்டரில் வைக்கப்படுகிறது. H – hydroxy chloroquine என்ற மருந்து முதல் 5நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் முதல் நாளில் 400 மில்லி கிராமும், அடுத்த 4 நாட்களுக்கு 200 மில்லி கிராமும் வழங்கப்படுகிறது.

Latest Spread of COVID-19 is 'Worrying'

இந்த 5 வகையான சிகிச்சை மற்றும் மருந்துகள் அவர்களின் உடல் நிலைக்கேற்ப வழங்கப்படுகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கூடுதலாக பிளாஸ்மா சிகிச்சைக்கும் அனுமதி அளித்துள்ளது ஐசிஎம்ஆர். பிளாஸ்மா சிகிச்சை தற்பொழுது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.