சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை 31,667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உள்ளது. மேலும் 10,954 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 22,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா சிகிச்சைக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM