ஆர்ட்டிகிள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. அயுஷ்மன் குரானா,நாசர் உள்ளிட்ட பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

ஏழைச்சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்படுவதும், அதனை விசாரிக்கும் அதிகாரிக்குச் சாதியின் பெயரால் தடங்கல்கள் வருவதும், அதனை அதிகாரி முறியடித்து நடவடிக்கை எடுப்பதுமே ஆர்ட்டிகிள் 15 திரைப்படத்தின் கதை.

image

இந்தத் திரைப்படத்தில் தமிழில் யார் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ரீமேக்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும், அருண் ராஜா காமராஜ் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

நடமாடும் வாகனத்தில் கேக் வாங்கி சாப்பிட்ட 18 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.