இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுடன் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் பதிலளித்துள்ளார்.

ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 53 ஒருநாள் போட்டிகள், 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2011 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் பிசிசிஐ ஸ்ரீசாந்துக்கு ஆயுள் தடை விதித்தது. பின்னர், நீதிமன்றத்தின் மூலம் 7 ஆண்டாக குறைக்கப்பட்டது. அவரது தடைக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஸ்ரீசாந்த தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே ஸ்ரீசாந்தும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் உரையாடி வருகிறார்.

Sreesanth abused Rahul Dravid in public, says Paddy Upton in his ...

இதனிடையே வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தன்னுடனும் டிராவிட்டுனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஸ்பாட் பிக்ஸிங் ஊழலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்தியதாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் பேடி அப்டன் குற்றம் சாட்டினார்.

டோனி, டிராவிட் எனக்கு ஆதரவு ...

இதுகுறித்து ஸ்ரீசாந்த் சமீபத்தில் பதிலளித்துள்ளார். “நான் ராகுல் டிராவிட்டை தவறாக பேசவில்லை. அவர் சிறந்த கேப்டன். தோனி தலைமையிலான சி.எஸ்.கே போட்டியின் போது நான் அணியில் இல்லை என்பதால் கோபமடைந்தேன். அணியில் இல்லாததற்கான காரணத்தைதான் கேட்டேன். ஆம், நான் சிஎஸ்கேவுக்கு எதிராக விளையாட விரும்பினேன். அவர்களுக்கு எதிராக வெற்றிப் பெற விரும்பினேன். ஆனால் என்னை ஒதுக்கி வைப்பதற்கான சரியான காரணம் எனக்குத் தெரியாது. டர்பன் போட்டியில், நான் எம்.எஸ்.தோனியிடம் பந்து வீசி அவரது விக்கெட்டை எடுத்தேன். அந்தப் போட்டிக்கு பின்னர், சி.எஸ்.கேவுக்கு எதிராக விளையாட எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. குழு நிர்வாகம் எனக்கு ஒருபோதும் சரியான காரணத்தைக் கூறவில்லை. நான் தோனி அல்லது சி.எஸ்.கேவை வெறுக்கவில்லை, ஆனால் நான் வண்ணத்துடன் செல்கிறேன். சி.எஸ்.கே ஜெர்சி ஆஸ்திரேலிய ஜெர்சி போல் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.