கொடைக்கானல் கீழ்மடையில் பசியுடன் தவித்த பழங்குடி மக்களுக்கு நீதிபதி உணவுப் பொருட்களை வழங்கி உதவினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில், பசி பட்டினியுடன் குழந்தைகள், முதியவர்கள் உட்பட 13க்கும் மேற்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவதிப்பட்டனர். இதனைக் கடந்த வாரம் புதிய தலைமுறை செய்தியாக வெளியிட்டது.

image

செய்தியின் வாயிலாக அவர்களின் நிலையை அறிந்த கொடைக்கானல் நீதிமன்றத்தின் நீதியரசர் தினேஷ் குமார், கீழ்மலையில் உள்ள எழுத்திரைக்காடு, கொரவனாச்சி ஓடை, குன்றக்காடு, கூட்டப்பாறை மற்றும் எக்குடிக்காடு என ஐந்து கிராமங்களைத் தேர்வு செய்து, நகரில் இயங்கி வரும் அவசரக்கால உதவிக்குழுவுடன் இணைந்து, சுமார் 100 குடும்பங்களுக்கு, ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள், குழந்தைகளுக்கான உணவு பண்டங்களை வழங்கினார். 

image

அத்துடன் வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள பழங்குடி கிராமங்களுக்கு, ஒற்றையடிப்பாதை வழியாக, நடந்து சென்று பார்வையிட்டார். அவரை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

“சிஎஸ்கேவும் மும்பை அணியும் மோதுவது இந்தியா- பாகிஸ்தான் போட்டியைப் போன்றது” ஹர்பஜன் சிங்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.