தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்றாகவுள்ளது.

image

கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் சென்னை அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. மே 1ஆம் தேதி சென்னையில் 176 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 316. கடந்த ஒரு வாரத்தில் சராசரியாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது.

image

ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்த வண்ணமே உள்ளது. சென்னையில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 644. பிற மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை 2ஆயிரத்து 766 ஆக உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.