உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார நெருக்கடிகள் வரை தத்தளித்துக்கொண்டு வருகின்றன. பெல்ஜியத்தில், கடந்த மார்ச் 18 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், 47,859 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவரீதியாக காப்பற்றிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் மேற்கொண்டும் தொற்று பரவாமலிருக்க ஊரடங்கு முழுவதுமாகத் தளர்த்தப்படாமல் தொடரும் நிலையே நீடிக்கிறது. பயிரிட்ட காய்கறி வகைகள் முதல் பால் வரை உலக அளவில் ஊரடங்கு நீட்டிப்பால் டன் கணக்கில் வீணாகின்றன. எதற்கு வீணாக விடவேண்டும் என காய்கறிகளை விலங்குகளுக்கு உணவாகவும், உரமாக்கவும் புதைக்கப்படும் முயற்சிகள் பெரும் அளவில் நடந்தேறிவருகின்றன. இத்தனை நாள்கள்வரை வாயில்லா ஜீவன்களைப் பொருட்டாக மதிக்காத மக்களையும் தேடிச்சென்று உணவளிக்க வைத்துள்ளது. கொரோனா என்பது ஆச்சர்யமே!

ஃப்ரைஸ்

ஃப்ரெஞ்ச் ஃப்ரை-க்கு பெயர்பெற்ற பெல்யஜிம் நாடும் உணவு வீணாக்கப்படுதலில் விதிவிலக்கல்ல. உருளைகிழங்குகளை அதிகம் சாகுபடி செய்யும் நாடான பெல்ஜியம், கொரோனா தொற்று பரவுதலுக்கு முன், உலகிலேயே உருளைக்கிழங்கு ஏற்றுமதியில் மிக பெரிய இடத்தை வகித்துவந்தது. ஆனால், ஊரடங்கிற்குப் பின் அதன் இடமே தடம்புரண்டுவிட்டது. பெல்ஜியத்தின் மொத்த உருளைக்கிழங்கு உற்பத்தியில் 75% புராசஸிங் முறைக்குப் பின் ஃப்ரைஸ் மற்றும் ஸ்நாக்குகளுக்காக (snacks) மாற்றப்படுகின்றன. ஊரடங்கு நீட்டிப்பால் ரெஸ்டாரன்டுகளும் மூடப்பட்டுள்ள நிலையில், பொட்டேட்டோ ஃப்ரைஸ் போன்றவைகளை சாப்பிடுவது மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது. ஃப்ரைஸ் (potato fries) விற்பனை ஆகாததால், புராசஸிங் செய்யப்படாமல் கிட்டத்தட்ட 30,000 பெரிய லாரிகள் கொள்ளளவு கொண்ட 750,000 டன் உருளைகிழங்குகள் அழுகி வீணாகும் நிலையில் உள்ளதாக பிரபல Belgapom நிறுவனம் கூறியுள்ளது.

பெல்ஜியன் ஃப்ரிட்ஸ் (one kind of famous potato fries variety) பிரபல உணவாக மாறியதற்கு முக்கியக் காரணம், அவை பெரும்பாலும் விருப்ப உணவாக டேக்-அவுட்’களாக ரெஸ்டாரன்ட்களில் பரிமாறபட்டதால்தான். கடந்த சனிக்கிழமை பெல்ஜியத்தில் ஊரடங்கு தளர்த்தபட்டப்போதும், பல ரெஸ்டாரன்ட்களை திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இதனால், டன் கணக்கில் விளைவிக்கப்பட்ட உருளைகிழங்குகள் வீணாவதைத் தடுக்க பல்வேறு யோசனைகளில் மூழ்கினர் அந்நாட்டின் முக்கிய அதிகாரிகள். Belgapom நிறுவனத்தின்(Belgian potato industry group) செக்ரெட்டரி ஜெனரலான ரோமைன்ஸ் கூல்(Romains Cool), “உருளைக்கிழங்குகளின் தேவை கணிசமாகக் குறைந்துள்ளதால், அவை அழுகிவிடாமல் இருக்க இத்தனை நாள்கள் ஃப்ரீஸ் செய்து (freeze) சேகரிக்கப்பட்டு வந்தன” என்றார். விற்பனை குறைந்த காரணத்தால் டன் கணக்கில் ஃப்ரீஸ் செய்து சேகரிக்க இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பின், வாரம்தோறும் 25 மெட்ரிக் டன் உருளைகிழங்குகளை உலக உணவு வங்கிக்கு டொநேட் செய்துவரும் Belgapom நிறுவனம், மே இறுதி வரைக்கும் அதைத் தொடர்வதாகக் கூறியுள்ளது.

ஃப்ரைஸ்

வாரம் இருமுறையாவது உருளைக்கிழங்கு வருவல்களை சாப்பிட்டு அவை வீணாவதை தடுக்குமாறு பெல்ஜியம் மக்களை வேண்டுகோள் விடுத்துள்ளார் ரொமைன்ஸ் கூல். வீட்டிலேயே இருப்பதால் அடிக்கடி ஸ்ட்ரெஸ் ஆகுபவர்களுக்கு அதை சமாளிக்க உருளைக்கிழங்கு ஃப்ரைஸ் கைக்கொடுக்கும் என்றும் அடுத்த பயிருடுதலின் போது குறைவான விளைச்சலுக்கு ஏற்ப பயிறுடுமாறு விவாசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு கூறினார் அவர். தெற்கு ப்ருசல்சில் (south brussels) இருக்கும் பிரபல உணவு கடையான செஸ் க்ளெமென்டைனில் (chez clementine), ஊரடங்கிற்கு பின் 130% வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவன மேலாளர் கூறியுள்ளது நம்மை மிகுந்த ஆச்சரியத்திற்கு தள்ளுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.