கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது, வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான காலகட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 6 சதவிகிதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்டௌன்

Also Read: டீன்ஏஜ் பிள்ளைகள், நியூக்ளியர் குடும்பம்… லாக்டௌன் நாள்களில் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி?

நாட்டின் மொத்த பாசிட்டிவ் எண்ணிக்கை 100-ஐ கடந்த பின்னர், தினசரி வைரஸ் தொற்று அதிகரிப்பு வேகத்தைப் பொறுத்தவரை இதுவே குறைவானது என்று அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. லாக்டௌன் அமல்படுத்தப்பட்டதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டதாகவும் அரசு கூறுகிறது.

இந்தத் தகவல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் நடைபெற்ற மூத்த அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,429 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், இறப்பு விகிதம் என்பது 3.1 சதவிகிதமாகவும் குணமடைவோரின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

லாக்டௌன்

அதேபோல், கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலகட்டமும் 10 நாள்களாகக் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. லாக்டௌனுக்கு முன்னர் இது 3.4 நாள்களாக இருந்தது. நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவிகிதம் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் 6,800-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1,600-க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.