கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மொத்த உலகமும் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை, உணவு பற்றாக்குறை, தொழில் துறை, பொருளாதாரம், உடல்நிலை என அனைத்துமே மோசமான நிலையில் உள்ளன. இந்த வைரஸால் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,911 – ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,235 – ஆகவும் உள்ளது.

கொரோனா

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து நாடுகளிலும் கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையான சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதனால் பெரும்பாலான நாடுகளில் சமூக இடைவெளிகளைக் கடுமையாக்கி, ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கான ஆலோசனைகள் நடந்துவருகின்றன. அமெரிக்காவில் ஊரடங்கைத் திரும்பப் பெறக்கோரி பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: `WHO’-வுடன் முட்டிமோதும் அமெரிக்கா… இந்திய மருத்துவ கவுன்சிலைப் பின்பற்றும் இந்தியா!

கொரோனா தொடர்பாக ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய WHO – வின் தலைவர் டெட்ரோஸ், “மேற்கு ஐரோப்பாவில் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஆனால், ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நாளுக்குநாள் இந்த மதிப்பு அதிகரித்துக்கொண்டேபோகிறது.

WHO தலைமை இயக்குநர்

பெரும்பாலான நாடுகள், இன்னும் தொற்று நோய்களின் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. முன்னதாக, வைரஸால் பாதிக்கப்பட்டு அதை கட்டுக்குள் கொண்டுவந்துள்ள நாடுகளில், தற்போது மீண்டும் வைரஸின் எழுச்சி நிலவுகிறது. அதனால் யாரும் எந்த தவறும் செய்யாதீர்கள். உலக நாடுகள் எந்தத் தவறான முடிவுகளும் எடுக்காதீர்கள். இன்னும் நாம் நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது. இந்த வைரஸ் நீண்ட நாள்களுக்கு நம்முடன் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

உடல் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, சமூக விலகல் போன்றவை, பிற நாடுகளுக்கு வைரஸை பரவவிடாமல் தடுக்கும். ஆனால், இந்த வைரஸ் கொடுமையானது, அதை ஒழிக்க மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிப்பது ஒன்றே சிறந்த வழி. நாங்கள் அதில் அதிக கவனம் செலுத்திவருகிறோம்.

Also Read: `மோசமான விளைவுகளை நாம் இன்னும் சந்திக்கவில்லை..!’ -WHO எச்சரிப்பதன் காரணம் என்ன? #Corona

கொரோனா நேரத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்துகளில் மக்களின் மன அழுத்தமும் ஒன்று. பல நாடுகளில் வாரக்கணக்கில் மக்கள் வீட்டிலேயே அடைத்துவைக்கப்பட்டுள்ளதால் விரக்தியடைந்துள்ளனர். அவர்கள், தங்கள் இயல்பு வாழ்க்கைக்குச் செல்ல விரும்புகிறார்கள். ஏனெனில், மக்களின் வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலையையே உலக சுகாதார அமைப்பும் விரும்புகிறது, பழைய நாள்களை மீட்க, நாங்கள் தினம் தினம் உழைத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.