கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணம் காட்டி வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விதிகளை சீனா பின்பற்றவில்லை எனில் அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிடுவேன் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

image

அமெரிக்கா சீனா இடையே இரண்டு ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வந்தது. இருநாடுகளும் போட்டி போட்டு கொண்டு இறக்குமதி வரிகளை அதிகப்படுத்தின. இதனால் சர்வதேச பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இரு நாடுகளும் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி சீனா 153 லட்சம் கோடி ரூபாய்க்கு அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும்.

image

ஆனால் கொரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்புகளை காரணம் காட்டி, புதிதாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற அம்சத்தை வர்த்தக ஒப்பந்தத்தில் சேர்க்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ட்ரம்ப், வர்த்தக ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிடுவேன் என எச்சரித்துள்ளார். தன்னை விட வேறு எவரும் சீனா மீது இத்தனை கடுமையான போக்கை கையாண்டதில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.