ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா சிகிச்சையில் எந்த பலனையும் அளிக்கவில்லை என வெளியாகியுள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 8 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. அடுத்ததாக ஸ்பெயினில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். உலக அளவில் அதிகபட்சமாக ஜெர்மனியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.

image

கொரோனா தொற்று ஏற்பட்டு, அஸித்ரோமைசின் மருந்துடனும், அது இல்லாமலும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை எடுத்து கொண்ட 368 கொரோனா நோயாளிகளிடம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நியூ இங்கிலாந்து மருத்துவ இதழுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில், கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பலனளிக்கிறது என்பதற்கான ஆதாரமே இல்லை என கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.